திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை ராஜாகுடியிருப்பை சேர்ந்த முருகன் மகன் விக்னேஷ்வர்(எ) விக்கி (வயது 29) என்பவர், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு டீ கடை அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கே வந்த பாளையங்கோட்டை, சமாதானபுரம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பாரத்(26) என்பவர் விக்னேஷ்வரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார்.
அதற்கு விக்னேஷ்வர் பணம் தர மறுத்த காரணத்தினால் அவரை பாரத் அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதுகுறித்து விக்னேஷ்வர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பாளையங்கோட்டை காவல்துறையினர் பாரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.