தமிழக செய்திகள்

சட்ட விரோதமாக 1.5 யூனிட் கருங்கல் வைத்திருந்தவர் கைது: லாரி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் இடைகால் வாய்க்கால் பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் இடைகால் வாய்க்கால் பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த, பள்ளக்கால் பொதுக்குடியைச் சேர்ந்த முருகன் (வயது 44) வந்த டிப்பர் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது, 1.5 யூனிட் கருங்கல்லை எந்தவித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக அள்ளிக் கொண்டு வந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து, பாப்பாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முருகனை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்த 1.5 யூனிட் கருங்கல் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து போலீசார் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.