தமிழக செய்திகள்

14.5 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது: பைக் பறிமுதல்

நெல்லை மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு பணியில் காவல் துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர்.

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு பணியில் காவல் துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது குலவணிகர்புரம் அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்த நாசரேத்தை சேர்ந்த நேசகுமார் (வயது 49) என்பவரை பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது அவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 14 கிலோ 517 கிராம் எடையுடைய புகையிலை பொருட்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, நேசகுமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.