தமிழக செய்திகள்

நெல்லையில் தடை செய்த புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

நெல்லை மாநகரம் சந்திப்பு பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு பணியில் காவல் துறையினர் ரோந்து சென்றனர்.

நெல்லை,

திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு பணியில் காவல் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் அருகில் சென்று கொண்டிருந்த சிந்துபூந்துறையை சேர்ந்த பூமணிசேட் (வயது 42) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 7 கிலோ 875 கிராம் எடையுடைய புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, சந்திப்பு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.