தமிழக செய்திகள்

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கழுகுமலை பகுதியில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர், அங்கிருந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கஸ்தூரிரங்கபுரம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 45). இவர் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி மகன் சதீஷ்(45) என்பவர், மாரியம்மாளின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கு மாரியம்மாளை தகாத வார்த்தைகளால் அவதூறாகப் பேசியதுடன், அவருக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாரியம்மாள் இதுகுறித்து கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த சதீஷை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT