திருநெல்வேலி மாநகரம் பழையபேட்டையை சேர்ந்த உமாசங்கர் மகன் இசைவினோத் (வயது 21) என்பவர் சேரன்மகாதேவி சாலை, பேட்டை குளக்கரை பள்ளிவாசல் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியே வந்த பேட்டை மலையாளம்மேடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் லட்சுமணன்(21) என்பவர் இசைவினோத்தை வழிமறித்து மது அருந்த பணம் கேட்டுள்ளார்.
இசைவினோத் பணம் தர மறுத்ததால் லட்சுமணன் அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக இசைவினோத் கொடுத்த புகாரின் பேரில் பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இசைவினோத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.