தமிழக செய்திகள்

பணகுடியில் கஞ்சா விற்றவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், தண்டையார்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் பணகுடி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், தண்டையார்குளம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் முருகன் (வயது 37) என்பவர் பணகுடி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேற்சொன்ன நபர் மீது பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அவரது வேண்டுகோளின்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், முருகன் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.