தமிழக செய்திகள்

குளிக்கும்போது வழுக்கி விழுந்த தொழிலாளி சாவு

குளிக்கும்போது வழுக்கி விழுந்த தொழிலாளி இறந்தார்.

கொரடாச்சேரி அருகே உள்ள தாழைக்குடியை அடுத்த கீரன்கோட்டகத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது48). விவசாய தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகே உள்ள கைப்பம்பில் குளிக்க சென்றார். அப்போது அங்கிருந்த பாசியில் கால் வழுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக அவருடைய தந்தை செல்வராஜ் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT