ஜெம் வீரமணி 
தமிழக செய்திகள்

போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் வீரமணியின் மேலாளரும் கைது

ஜெம் வீரமணி மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மற்றுமொரு சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஏழாவதாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை,

சிறுமிகளை சீரழித்த 84 வயதான தொழில் அதிபர் ஜெம் வீரமணி ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி என்ற பெண் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனுடன் கைது செய்யப்பட்டார்.

14 மணி நேரம் விசாரணை

வீரமணி சிறுமிகளுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகளை வைத்திருத்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காத வீரமணியின் முன்னாள் உதவியாளர் கணேசன் மற்றும் சிறுமிகளை அழைத்து வந்த டிரைவர்கள் லாசர், பார்த்திபன் மற்றும் பாபு ஆகியோர் மீது அடுத்தடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.சமீபத்தில் ஜெம் வீரமணியிடம் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் 200 கேள்விகளை எழுப்பி 14 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்து வரும் எஸ்.ஐ.டி இன்று செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.. அதில் கூறியிருப்பதாவது:-

மேலாளர் கைது

ஏற்கனவே ஜெம் வீரமணி மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மற்றுமொரு சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஏழாவதாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் வீரமணியின் பெண் தோழியான சாந்தி வீட்டில் சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. ஜெம் வீரமணிக்கு அவர் நடத்தி வரும் ‘ஜெம்’ கிரானைட் நிறுவனத்தின் மேலாளர் சக்திவேல் உதவியிருப்பது தெரிய வந்தது. எனவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சக்திவேல் மூலம் வீரமணி சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்கு செய்த பணப்பரிமாற்றங்கள் குறித்த விசாரணை நடக்கிறது.இதுவரை பாதிக்கப்பட்ட 11 சிறுமிகள் குறித்த புகார்களின் பேரில் வீரமணி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT