தமிழக செய்திகள்

பேச்சிப்பாறை மகா மாரியம்மன் கோவில் மண்டலாபிஷேகம்

பேச்சிப்பாறை மகா மாரியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் நடந்தது.

நொய்யல் அருகே பேச்சிப்பாறையில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்ததையடுத்து மண்டாபிஷேகம் நடந்தது. இதையடுத்து பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்தனர். பின்னர் மகா மாரியம்மன் உள்பட பரிவார தெய்வங்களுக்கும் பால், பழம், விபூதி, சந்தனம், இளநீர் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT