தமிழக செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாய பணியிட மாற்றம்: புதிய விதிகள் வெளியீடு

ஊழியர்கள் தங்களுக்கு விருப்பமான கடையை தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

டாஸ்மாக் ஊழியர்கள் இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாய இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்ற புதிய விதிகள் வரையறுக்கப்பட்டு உள்ளன.

கட்டாய இடமாற்றம்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான இடமாற்றம் மற்றும் பணி அமர்த்துவது தொடர்பாக புதிய விதிமுறைகளை டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கே.நந்தகுமார் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ஒரு மதுக்கடையில் 3 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்கள் கட்டாயமாக வேறு கடைக்கு மாற்றப்படுவார்கள். இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த விதி டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு என அனைவருக்கும் பொருந்தும். அதற்காக இந்த மாதத்திலேயே பணியிட மாறுதல்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

30-ந் தேதிக்குள்...

அதற்காக ஒவ்வொரு கடையிலும் எத்தனை ஊழியர்கள் இருக்க வேண்டும் என்பது கணக்கிடப்படும். தற்போது எத் தனை பேர் பணியில் உள்ளனர். ஊழியர்கள் பற்றாக்குறை உள்ள கடைகள், தேவைக்கு அதிகமாக ஊழியர்கள் உள்ள கடைகள் ஆகியவை கண்டறியப்படும்.

3 ஆண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்த ஊழியர்களும் அடையாளம் காணப்படுவார்கள். அதன்பிறகு தேவைக்கு ஏற்ப ஊழியர்கள் வேறு கடைகளுக்கு மாற்றப்படுவார்கள். இந்த பணியிட மாற்றம் மற்றும் புதிய இடங்களில் பணியில் சேரும் பணிகள் அனைத்தும் வருகிற 30-ந் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

3 வகைகள்

மேலும் டாஸ்மாக் கடைகள் தினசரி விற்பனை அடிப்படை யில்' 'ஏ, பி, சி" என 3 வகைகளாக பிரிக்கப்படும். 'ஏ' வகை கடையில் ஒரு மேற்பார்வையாளர், ஒரு கூடுதல் மேற்பார்வை யாளர், 6 விற்பனையாளர்கள், ஒரு உதவி விற்பனையாளர் என மொத்தம் 9 பேர் இருக்க வேண்டும்.

'பி' வகை கடை யில் ஒரு மேற்பார்வையாளர், 2 கூடுதல் மேற்பார்வையாளர்கள், 5 விற்பனையாளர்கள், ஒரு உதவி விற்பனையாளர் என மொத்தம் 8 பேர் இருக்க வேண்டும். 'சி' வகை கடையில் ஒரு மேற்பார்வையாளர், ஒரு கூடுதல் மேற்பார்வையாளர், 4 விற்பனையாளர்கள். ஒரு உதவி விற்பனையாளர் என மொத்தம் 5 பேர் இருக்க வேண்டும்.

உரிமை கோர முடியாது...

2028-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ந் தேதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன்படி, 3 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களின் பட்டியல் தயாரிக்கப்படும். ஏப்ரல் மாதத்தில் கலந்தாய்வு நடத்தப்படும். இதில் ஊழியர்கள் தங்களுக்கு விருப்பமான கடையை தெரிவிக்கலாம்.

ஆனால், காலிப்பணியிடம், அந்த கடைக்கு தேவையான ஊழியர்கள் எண்ணிக்கை, கடையின் வகை மற்றும் மாவட்டத்தின் ஒட்டுமொத்த பணியாளர் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டே இடம் ஒதுக்கப்படும். ஒரு குறிப்பிட்ட கடையில் பணியாற்ற வேண்டும் என்று எந்த ஊழியரும் உரிமை கோர முடியாது என்றும் புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT