சென்னை,
தமிழ்நாடு மநில காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செல்வபெருந்தகை மாற்றப்பட்டு புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு தமிழக அரசியல் களம் மாறியது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது இருந்தே செல்வபெருந்தகை மாற்றம் செய்யப்படலாம் என்று பேச்சு அடிபட்டது.
செல்வபெருந்தகையும் தன்னை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றுமாறு கோரிக்கை விடுத்ததாக கூறியிருந்தர். இந்த நிலையில், மாணிக்கம் தாகூரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ளது. விருதுநகர் தொகுதி எம்பியாக உள்ள மாணிக்கம் தாகூர், தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று குரல் கொடுத்து வந்தார். அதிரடி பேச்சுகளால் அறியப்படும் மாணிக்கம் தாகூர், திமுகவை சமீப காலமாக கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.