சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு. அவருக்கு பதி லாக நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி கொறடா மாணிக்கம் தாகூர் எம்.பி. புதிய மாநிலத் தலை வராக அகில இந்திய காங்கிரஸ் தலைமையால் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாணிக்கம் தாகூர் பதவியேற்கும் விழா இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் நடக்கிறது. அவரிடம், முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பதவியை ஒப்படைக்கிறார்.
இந்த விழாவுக்கு, அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பதவியேற்பு விழாவை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னணி் தலைவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.