தமிழக செய்திகள்

பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

எதிர்காலத்திலும் பல வெற்றிகளை பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாரா ஆசிய விளையாட்டில் பேட்மிண்டனில் தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸ் வெண்கலம் வென்றதற்கு முதல்-அமைச்சர் விஜய் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

வெண்கலப் பதக்கம்

இதுதொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ. 30 லட்சம்

வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களின் சாதனையை பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் இச்சாதனையைப் படைத்துள்ள வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களின் வெற்றி இளம்தலைமுறை பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும்.

அவர், எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT