தமிழக செய்திகள்

நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து கூறி கண்கலங்கிய மன்சூர் அலிகான்

நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கேட்டறிந்தார்.

சென்னை,

சென்னை ராஜீ்வ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக நடிகர் மன்சூர் அலிகான் அரசு மருத்துவமனை வருகை தந்தார். மருத்துவமனையில் உள்ள நல்லகண்ணு குடும்பத்தாரிடமும், மருத்துவர்களிடமும் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது, ’சிறுவனாக இருந்த போது பள்ளிக்கூடத்தில் இருந்தே விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர். வெள்ளையனுக்கு எதிராக பள்ளிப்பருவத்திலே தனது போராட்டத்தை ஆரம்பித்தவர்.

அவரது வாழ்க்கையில் உன்னத மனிதராக இதுவரை வாழ்ந்து வந்தவர். இப்போது மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார். கொள்கையை விட்டுக் கொடுக்காத உழைப்பாளியாக வாழ்ந்து வந்தார். தற்போது அவரது முகங்கள் கருத்து விட்டது. சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன. மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது’’என கூறி கண்கலங்கினார்.