சென்னை,
மறைமலைநகரில் தற்கால பேருந்து நிலைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகள் எளிதாகப் பேருந்துகளில் ஏறிச் செல்லும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மறைமலை நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 382 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து மறைமலை நகருக்கு வரும் பயணியரை ஏற்றிச் செல்ல தனியாக 45 இலவச மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்தநிலையில், கனமழையால் மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையங்களில் வெள்ளநீர் தேங்கியதால் பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்துக்கு மாற்றம் செய்து போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
டெல்டா செல்லும் சிறப்பு பேருந்துகள் 5வது நடைமேடையில் இருந்தும், தி.மலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் 7வது நடைமேடையில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைமலை நகர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததாலும், வெள்ளநீர் தேங்கியதால் போக்குவரத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.