தமிழக செய்திகள்

வள்ளியூரில் மாரத்தான் போட்டி: 10 கி.மீ. தூரம் ஓடி 4 வயது சிறுமி சாதனை

சக போட்டியாளர்களுடன் இணைந்து ஓடிய சிறுமி, 10 கி.மீ. தூர இலக்கினை வெற்றிகரமாக கடந்துசென்று சாதனை படைத்தாள்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உலக இதய தினத்தையொட்டி தனியார் மருத்துவமனை சார்பில் 10 கி.மீ. தூரத்துக்கு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரின் மகள் ரிபசின் வர்சா (4 வயது) என்ற சிறுமியும் ஆர்வத்துடன் கலந்து கொண்டாள். சக போட்டியாளர்களுடன் இணைந்து ஓடிய சிறுமி, சற்றும் சளைக்காமல் 10 கி.மீ. தூர இலக்கினை வெற்றிகரமாக கடந்துசென்று சாதனை படைத்தாள்.

சிறுமியின் திறமையை கண்டு வியப்படைந்த பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். மேலும் அந்த சிறுமியை வெகுவாக பாராட்டினர்.

SCROLL FOR NEXT