மருது சகோதரர்கள் 
தமிழக செய்திகள்

சிவகங்கையில் மருதுபாண்டியர் குருபூஜை: சாலையில் பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் பாடிய காவலர்!

சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிவகங்கை,

சிவகங்கையில் நடைபெற்ற மாமன்னர் மருதுபாண்டியர்களின் குருபூஜை விழாவையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடிய எளிய சாலை பாதுகாப்பு பாடல் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

மருதுபாண்டியர் குருபூஜை பாதுகாப்பு

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர்களின் 225-வது குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காவலரின் விழிப்புணர்வு பாடல்

இந்நிலையில், சிவகங்கை பகுதியில் வாகன சோதனை மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர், இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்த இளைஞர்களை வழிமறித்து எச்சரித்தார். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை இயக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி, "புர்ர்ர்னு ஓட்ட வேண்டாம்.. சறுக்கி கீழே விழ வேண்டாம்.. மாவுக்கட்டு போட வேண்டாம்.." என்று அவர் எளிய மெட்டில் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வீடியோ வைரல்

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவலர் பாடிய எளிய சாலை பாதுகாப்பு பாடல் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. வழக்கமான கண்டிப்பு பாணியில் இல்லாமல், நகைச்சுவையுடனும் எளிய வரிகளுடனும் அவர் விழிப்புணர்வு ஏற்படுத்திய விதம் பொதுமக்களாலும் சமூக வலைதளவாசிகளாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT