தமிழக செய்திகள்

கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த முகமூடி கொள்ளையர்கள்: போலீஸ் வலைவீச்சு

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், தனது வீட்டின் அருகே செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார்.

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜீவா (வயது 18), தனது வீட்டின் அருகே செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்தபடி வந்த 2 பேர், ஜீவாவிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச்சென்றனர். இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT