தமிழக செய்திகள்

பழனி அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

பழனி அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டி மேற்கு காலனியை சேர்ந்தவர் முருகசாமி (வயது 32). கொத்தனார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக இவர், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது முருகசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT