தமிழக செய்திகள்

மாதர் சங்க கூட்டம்

எரவாஞ்சேரியில் மாதர் சங்க கூட்டம் நடந்தது.

குடவாசல்:

குடவாசல் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாதர் சங்க கூட்டம் எரவாஞ்சேரியில் நடந்தது.கூட்டத்திற்கு சங்க தலைவர் ஏ. சந்தனமேரி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் டேவிட் ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் சுப்ரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி, தினசரி ஊதியம் ரூ.600 வழங்க வேண்டும். எரவாஞ்சேரி கடைத்தெருவில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT