தமிழக செய்திகள்

செல்வ விநாயகருக்கு மாவிளக்கு பூஜை

செல்வ விநாயகருக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

கரூர்- ஈரோடு செல்லும் சாலையில் உள்ள ஆண்டவர் நகரில் பிரசித்தி பெற்ற செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவையொட்டி செல்வ விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து, திரளான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு பூஜையும் செய்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு செல்வ விநாயகரை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.