சென்னை,
மே தின தொடர் விடுமுறை மற்றும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு,சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் 2.13 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மே தின தொடர் விடுமுறை மற்றும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழங்கள் மூலமாக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவற்றின் விபரம் வருமாறு, 30.04.2026 முதல் 01.05.2026 அதிகாலை 3 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 1,784 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 3,876 பேருந்துகள் இயக்கப்பட்டு, 2,13,180 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இன்று பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.