தமிழக செய்திகள்

‘தீமைகள் அகன்று நன்மைகள் பெருகட்டும்’ - தீபாவளிக்கு மாணிக்கம் தாகூர் வாழ்த்து

ஏழை, எளியோருக்கு இயன்ற உதவிகளைச் செய்து அனைவரிடத்திலும் அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வோம்.

சென்னை,

தீமைகள் அகன்று நன்மைகள் பெருகவும், அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, செல்வ வளம் நிறையவும் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீபாவளி

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்த தீபாவளி திருநாளில் தீமை அகன்று நன்மை பெருகி, அனைவரின் வாழ்விலும் புதிய ஒளியுடன், இல்லங்களில் மகிழ்ச்சியும், அமைதியும், ஆரோக்கியமும், செல்வ வளமும் நிறைய வேண்டும். சாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரிடத்திலும் அன்பும், ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஓங்கி வளரட்டும். இத்தீபாவளி திருநாளை பாதுகாப்புடனும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடனும் கொண்டாட வேண்டும். ஏழை, எளியோருக்கு இயன்ற உதவிகளைச் செய்து அனைவரிடத்திலும் அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வோம்.

மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயம் தேடுகின்ற வகையில், ஆட்சி நடத்தி வருகிற பா.ஜ.க.விற்கு மக்கள் பாடம் புகட்டும் நிலை உருவாகி வருகிறது. தீமையை வதம் செய்த திபாவளித் திருநாளில், வகுப்புவாத நச்சு சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் வகையில் மதநல்லிணக்கத்தின் அடையாளமாக இத்தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம்.

வாழ்த்து

நாட்டிற்கு வளர்ச்சியையும், அமைதியையும், அனைவரின் வாழ்வில் வளத்தையும் தரும் நாளாக இத்திப ஒளி திருநாள் அமைய வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT