தமிழக செய்திகள்

இரட்டைமலை சீனிவாசனின் புகழைத் தலைமுறைகள் தொடர்ந்து நினைவுகூரட்டும்: நயினார் நாகேந்திரன்

இரட்டைமலை சீனிவாசனின் சமூக நீதிப் பயணத்தை போற்றி வணங்கிடுவோம் என நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளையொட்டி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”சமூக நீதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாள் இன்று!

‘பறையன்’ இதழைத் தொடங்கி, கல்வி, சமூக முன்னேற்றம், சமத்துவம் மற்றும் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர். தாழ்த்தப்பட்ட மக்களின் குரலை அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் வலிமையாக ஒலிக்கச் செய்த முன்னோடிகளில் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன்.

சமத்துவமும் சுயமரியாதையும் நிறைந்த சமூகத்தை உருவாக்க அவர் மேற்கொண்ட அரும்பணிகள் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும். அவரது சமூக நீதிப் பயணத்தையும் சீர்திருத்தச் சிந்தனைகளையும் இந்நாளில் போற்றி வணங்கி, அவரது புகழைத் தலைமுறைகள் தொடர்ந்து நினைவுகூரட்டும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT