கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

விநாயகப் பெருமானின் அருளால் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

விநாயகர் பெருமானின் அவதார திருநாளான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்! மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT