சென்னை,
வண்ணக் கனவுகளோடு சிறகடிக்கும் நம் செல்லக் குழந்தைகள் ஒவ்வொரு துறையிலும் புதிய சிகரங்களைத் தொடட்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1889-ம் ஆண்டு நவம்பர் 14-ந்தேதி உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் (தற்போது பிரயாக்ராஜ்) மோதிலால் நேரு- ஸ்வருப் ராணி தம்பதியின் மகனாகப் பிறந்தார். 'நவீன இந்தியாவின் சிற்பி' என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ந்தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று நேருவின் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் அவரது நினைவைப் போற்றி, மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள குழந்தைகள் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
வண்ணக் கனவுகளோடு சிறகடிக்கும் நம் செல்லக் குழந்தைகள், ஒவ்வொரு துறையிலும் புதிய சிகரங்களைத் தொடட்டும். அன்பும், நல்ல வழிகாட்டுதலும் கொடுத்து அவர்களின் பாதையை அழகாக்குவோம்.
என் அன்பிற்குரிய குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.