தமிழக செய்திகள்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

பாவேந்தர் பாரதிதாசனின் 136-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

சென்னை,

"புரட்சிக்கவியும், சமூக சிந்தனையாளருமான பாவேந்தர் பாரதிதாசனின் 136-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளையொட்டி துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், " தமிழர்களின் சுயமரியாதை உணர்வை தமது தீப்பொறி வரிகளால் தட்டி எழுப்பிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாள் இன்று!

இனப்பகைவர்களின் சூழ்ச்சிகளை கூரிய வரிகளால் தோலுரித்து, தமிழினத்தை எழுச்சிக் கொள்ள செய்த பாவேந்தரின் பாடல்கள் - ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக!”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.