தமிழக செய்திகள்

இசைஞானியின் இசைத்தொண்டு காலங்களைக் கடந்து தொடர வேண்டும் - அன்புமணி வாழ்த்து

இசைஞானி நூறாண்டுகளைக் கடந்து வாழ்ந்து இசையால் இனிவரும் தலைமுறைகளையும் மகிழ்விக்க வேண்டும் என்று அன்புமணி கூறினார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பாதாவது:-

எங்களின் இசை மருத்துவரும், உலகின் தலைசிறந்த இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜா அவர்கள் 83-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இசைஞானியின் இசை மருத்துவம்

இசைஞானியின் தனிச்சிறப்பு என்னவென்றால், தாய், தந்தை, குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரையும் விட, இசையாய் மிக அதிக நேரம் ஒவ்வொருவருடனும் இணைந்திருப்பது தான். இளையராஜா படைப்புகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மன சஞ்சலங்கள், மன அழுத்தங்கள் உள்ளிட்ட அனைத்து சிக்கல்களுக்கும் இலவச மருத்துவமாக அமைவது அவரது இசை தான்.

இசைஞானியின் இசைத் தொண்டு காலங்களைக் கடந்து தொடர வேண்டும். இசைஞானி நூறாண்டுகளைக் கடந்து வாழ்ந்து இசையால் இனிவரும் தலைமுறைகளையும் மகிழ்விக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.