தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு மயோனைஸ் தடை நீட்டிப்பு

ஷவர்மா மற்றும் பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் 'மயோனைஸ்' அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள அசைவ உணவகங்களில், முட்டையின் வெள்ளைக் கருவை பயன்படுத்தி 'மயோனைஸ்' தயாரிக்கப்படுகிறது. ஷவர்மா மற்றும் பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் 'மயோனைஸ்' அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரலில் இதற்கு தடை விதிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையரின் உத்தரவின் கீழ் வெளியிடப்பட்டது.

பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்-க்கு விதிக்கப்பட்டிக்கும் தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

SCROLL FOR NEXT