சென்னை,
தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளுக்காக ம.தி.மு.க. சார்பில் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“2026 அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ள தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் பணிக்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ‘தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்’ கீழ்காணுமாறு நியமிக்கப்படுகிறார்கள்.
தாராபுரம் சட்டமன்ற தொகுதி
புதூர் மு.பூமிநாதன் Ex MLA
கழகத் துணை பொதுச்செயலாளர்
கைப்பேசி : 9443056970
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி
சு.ஜீவன் M.C.,
கழகத் துணை பொதுச்செயலாளர்
கைப்பேசி : 8148898063”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.