சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், சூர்யகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "1980-களில் இந்தியாவில் பிணந்தின்னி கழுகுகள் சுமார் 4 கோடி இருந்தது. தற்போது, வெறும் 90 ஆயிரம்தான் உள்ளது. அதுவும், தமிழ் நாட்டில் நீலகிரி, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெறும் 100 கழு குகள்தான் உள்ளன. இதை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, "கழுகுகளை பாதுகாக்க அரசு 14 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளது. அந்த குழு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.
மனுதாரர் தரப்பில் ஆஜராக வக்கீல் சொக்கலிங்கம், "கழுகுகளை பாதுகாக்க நிபுணர்கள் பரிந்துரையை தாக்கல் செய்யும்படி ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு எங்களுக்கு உத்தரவிட்டது. அதன்படி, விலங்குகள் நல ஆர்வலர் நிபுணர் மணிகண்டன் செல்வராஜ் பரிந்துரை செய்துள்ள பரிந்துரைகளை தாக்கல் செய்கிறேன்” என்று கூறி அறிக்கையை தாக்கல் செய்தார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், "கழுகுகளை பாதுகாக்க மத்திய அரசு இதுவரை ரூ.26 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளது. அந்த நிதியை முறையாக செலவு செய்யப்பட்டதா? என்பதை அரசு இது வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை” என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "மனுதாரர் தாக்கல் செய்துள்ள நிபுணரின் பரிந்துரையை தமிழ்நாடு அரசு நியமித்துள்ள நிபு ணர்கள் குழு பரிசீலிக்கவேண்டும். கழுகுகளை பாதுகாக்க தகுந்த நடவடிக் கையை அரசு எடுக்கவேண்டும்" என்று உத்தரவிட்டனர்.