தமிழக செய்திகள்

ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்ய நடவடிக்கை - அமைச்சர் வெங்கடரமணன் தகவல்

ரேஷன் கார்டில் கைரேகை பதிவு செய்யும் பணி 97 சதவீதம் முடிந்துள்ளது என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“மாநிலம் முழுவதும் இதுவரை 20 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு தபாலில் அனுப்ப ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. ரேஷன் கார்டில் உள்ள அனைவரும் கைரேகை பதிவு செய்ய வேண்டும்.

அதற்கான பணிகள் 97 சதவீதம் முடிந்து உள்ளது. ரேகை பதிவாகாதவர்களுக்கு கண் விழி ஸ்கேன் செய்யப்படுகிறது. வருங்காலத்தில் ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு அவர் கூறினார்.