சென்னை,
உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed) 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக.11-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக மாணாக்கர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனர். ஆக.20-ந் தேதி உடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், மாணாக்கர் நலன் கருதி விண்ணப்பப் பதிவு செய்யத் தவறிய மாணாக்கர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் ஆக.31-ந் தேதி முதல் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.
ஆக.20-ந் தேதி வரை விண்ணப்பித்த மணாக்கர்களுக்கு தர வரிசையின் அடிப்படையில் மாணாக்கர் சேர்க்கை ஆக.27-ந் தேதி முதல் எம்.எட் தொடங்கி நடைபெறும் எனவும். மாணாக்கர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1-ல் தொடங்கும். மேலும் விண்ணப்பித்த மாணாக்கர்களுக்கு சேர்க்கைக்கான விவரங்கள் SMS மற்றும் மின்னஞ்சல் (E-mail) வாயிலாக அனுப்பப்படும்.
இந்நிலையில், ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணாக்கர் இரண்டாம் கட்ட சேர்க்கைக்கு தொடர்ந்து விண்ணப்பிக்கும் வகையில் செப்.10-ந் தேதி வரை கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணாக்கர் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தித் தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ள வேண்டும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.