சென்னை,
சென்னையில் 103 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை திருவொற்றியூரில் ஒரு சில இடங்களில் காய்ச்சல் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக மாநகராட்சி சார்பில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் சென்னை சுற்றியுள்ள 15 மண்டலங்களில் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை அழிப்பதற்காக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் மருத்துவர்கள் மூலம் 103 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மருத்துவ முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.