தமிழக செய்திகள்

மருத்துவ பரிசோதனை: கழிவறைக்கு சென்ற கைதி ஜன்னல் வழியே தப்பி ஓட்டம்

தப்பி ஓடிய கிரணை விடிய விடிய தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

கோவை,

மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட கைதி கழிவறையில் உள்ள ஜன்னல் வழியாக தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைதி தப்பி ஓட்டம்

கோவை மாவட்டத்தில் வசித்து வரும் கிரண் என்பவரை நேற்று திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக சூலூர் அரசு மருத்துவமனைக்கு கிரணை அழைத்து சென்றனர். அப்போது கழிவறைக்கு சென்ற கிரண் அங்கிருந்த ஜன்னல் வழியாக வெளியே தப்பி சென்றார். போலீசார் விடிய விடிய அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கைது

இந்த நிலையில் இன்று அதிகாலை கருமத்தம்பட்டி அருகே அவர் பதுங்கியிருந்துள்ளார். அவரை சுற்றிவளைத்த போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட கைதி ஜன்னல் வழியாக தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT