தமிழக செய்திகள்

மருத்துவ மாணவர் சேர்க்கை: அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை; தமிழக அரசு அறிவிப்பு

மத்திய மந்திரிகளுடன், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று ஆலோசனை நடத்திய பிறகு, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் அளித்திருந்த பேட்டியை சில ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டு ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

இதையடுத்து தமிழக அரசு தரப்பில் இருந்து ஒரு அறிக்கை நேற்று இரவு வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உயர்கல்வித் துறை அமைச்சரின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, தமிழக அரசு தனியாக நீட் தேர்வை மாநில அளவில் நடத்த இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இது முற்றிலும் தவறானது ஆகும். தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெற கூடாது என்பது மட்டுமல்லாது, மாணவர்கள் படிக்கும் பிளஸ்-2 வகுப்பு இறுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு