சென்னை,
தேமுதிகவில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகவும், விஜயகாந்தித்தின் தீவிர ஆதரவாளருமாக இருந்த மீசை ராஜேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த மூன்று சட்ட சபை தேர்தல்களிலும் போட்டியிட்ட மீசை ராஜேந்திரனுக்கு இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்த நிலையில்தான், மீசை ராஜேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். கட்சியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அந்த கடிதத்தில் கோரியுள்ளார். கேப்டன் மன்றத்தில் 31ஆண்டுகளும் தேமுதிகவில் 21 ஆண்டுகளும் உழைத்து இருப்பதாக என்றும் மீசை ராஜேந்திரன் கூறினார்.