தமிழக செய்திகள்

சென்னை மேயர் ஆர்.பிரியாவுடன் நியூசிலாந்து, கிறிஸ்ட்சர்ச் நகரின் மேயர் சந்திப்பு!

இரு நகரங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து இன்று கலந்துரையாடினர்.

சென்னை,

சென்னை மாநகராட்சி மேயரை, நியூசிலாந்து, கிறிஸ்ட்சர்ச் நகரின் மேயர் தலைமையிலான குழுவினர் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தனர். அப்போது, இரு நகரங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து இன்று கலந்துரையாடினர்.

மேயர்கள் சந்திப்பு

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

இன்று (29.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவை, நியூசிலாந்து, கிறிஸ்ட்சர்ச் நகரின் மேயர் பில் மாகர் (Mr. Phil Mauger - Mayor of Christchurch), தலைமையிலான குழுவினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து, இரு நகரங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.

பின்னர், நகர்ப்புற மேலாண்மை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் நவீன உத்திகளைக் அறிந்து கொள்ளும் வகையில் ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாட்டினைப் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், நியூசிலாந்து, கிறிஸ்ட்சர்ச் நகரின் துணை மேயர் விக்டோரியா ஹென்ஸ்டாக் (Ms. Victoria Henstock - Deputy Mayor of Christchurch), இந்தியா - நியூசிலாந்து வணிகக் கவுன்சில் (INZBC) வாரிய உறுப்பினர் திரு. எட்வின் பால் (Mr. Edwin Paul - Board Member, India New Zealand Business Council (INZBC)), மேயர் அலுவலகம் மற்றும் குடிமைச் சேவைகள் அலுவலகத்தின் தலைவர் டங்கன் சாண்டெமன் (Mr. Duncan Sandeman - Head of the Office of the Mayor and Civic Services, Christchurch City Council), காண்டர்பரி பல்கலைக்கழகம் உதவி துணைவேந்தர் டாக்டர் டேவிட் கிரெய்க் (Dr. David Craig - Assistant Vice-Chancellor, Engagement, University of Canterbury), பன்னாட்டு மேம்பாட்டு இயக்குநர் டாக்டர் கிரஹாம் வைஸ் (Dr. Graham Wise - Director of International Development, University of Canterbury), கிறிஸ்ட்சேர்ச்என்இசட் (ChristchurchNZ - கிறிஸ்ட்சேர்ச் பொருளாதார மேம்பாட்டு முகமை) தலைவர் லாரன் குவைன்டன்ஸ் (Ms. Lauren Quaintance - Chairperson, ChristchurchNZ, Christchurch's economic development agency) ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT