தமிழக செய்திகள்

மேகதாது விவகாரம்: கர்நாடக அரசை கண்டித்து ஆகஸ்ட் 2-ந்தேதி ஒகேனக்கலில் ஆர்ப்பாட்டம் - தே.மு.தி.க. அறிவிப்பு

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தே.மு.தி.க. அறிவித்துள்ளது.

சென்னை,

விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடக அரசை எதிர்த்து தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் வலுசேர்க்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியில் இருந்து இதுவரை தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாததைக் கண்டித்தும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வருகின்ற (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.