திருச்சி,
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை -திருச்சி இடையே இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் (செவ்வாய்க்கிழமை) முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வண்டி எண் 06195 திருச்சியில் இருந்து இன்று இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
வண்டி எண் 06196 சென்னை எழும்பூரில் இருந்து நாளை காலை 11.15 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு திருச்சிக்கு வந்தடையும். இந்த ரெயில்கள் திருவெறும்பூர், தஞ்சாவூர், பாபநாசம். கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம். செங்கல்பட்டு. தாம்பரம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.