தமிழக செய்திகள்

தமிழகத்திலேயே `மெத்’ தயாரிப்பு? அதிர்ச்சி தகவல்

பெங்களூரு கும்பலுடன் தமிழக கடத்தல்காரர்களுக்கு தொடர்பு என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையே கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன.

போதைப்பொருள் கடத்தல்

குறிப்பாக, மண்டபம், தனுஷ்கோடி, நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற கடலோரப் பகுதிகள் வழியாக கஞ்சா. ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் இலங்கைக்கு அதிகளவில் கடத்தப்படுகின்றன.

வட மாநிலங்களில் இருந்து சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்குக் கொண்டு வரப்படும் இந்த போதைப்பொருட்கள் படகுகள் மூலம் சர்வதேச கடல் பகுதியில் வைத்து நடுக்கடலில் கைமாற்றப்படுகின்றன. இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரம் நடுத் தெரு கிழக்கு சாலை பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் சுகநாதன்(வயது 27). பைனான்சி யரான இவரது வீட்டில் இருந்து உயர்ரக போதைப்பொருளான மெத்தபெட்டமைன் இலங் கைக்கு கடத்த இருப்பதாக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் நேற்று முன் தினம் 7 மணி அளவில் சுகநாதன் வீட்டிற்கு மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக இணை இயக்குனர் கனகசுப்பிரமணியன், நாகை சுங்கத்துறை கண் காணிப்பாளர்கள் சசிசேகர் ஆனந்த், தீபக் ஆகியோர் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீர் என வந்தனர்.

வீட்டில் சோதனை

அப்போது அங்கு வீட்டில் இருந்த சுகநாதன் மற்றும் அவரது நண்பர்கள் பிரதாபராமபுரம் யாதவர் தெரு பகுதியை சேர்ந்த தனபாலன் மகன் சதீஷ்குமார்(30), வேளாங்கண்ணி செட் டித்தெரு பகுதியை சேர்ந்த காந்தி மகன் மணிகண்டன் (39) ஆகியோர் இருந்தனர்.

அங்கு சென்ற வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் வீட்டில் தீவிர சோதனை செய் தனர். இந்த சோதனையில் 5 கிலோ எடையுள்ள 27 பாக்கெட்டுகளில் மொத்தம் 135 கிலோ மெத்தபெட்டமைன் எனப்படும் உயர்ரக போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக த.வெ.க. நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விரைவில் முக்கிய புள்ளிகள் கைது

இந்தநிலையில், மெத் தயாரிப்பு மூலப்பொருட்கள் நேபாளத்தில் இருந்து வந்ததாகவும் தமிழகத்திலேயே தயாரிக்கப்பட்டதாகவும் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு கும்பலுடன் தமிழக கடத்தல்காரர்களுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் ராமநாதபுரத்தில் தயாரிக்கப்பட்ட போதைபொருள் நாகையில் பதுக்கலா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூலையில் ராமநாதபுரத்தில் மெத் தயாரிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. ராமநாதபுரம் லேத் பட்டறையில் மெத் தயாரிப்பில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். விரைவில் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT