தமிழக செய்திகள்

பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரெயில்: நாளை காலை 6 மணி முதல் தொடங்கும் என அறிவிப்பு

வடபழனி, பூந்தமல்லியில் இருந்து கடைசி ரெயில் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை பூந்தமல்லி வட பழனி இடையிலான மெட்ரோ ரெயில் சேவை அக்.11-ஆம் தேதி தொடங்கி யது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின் றன. இந்தநிலையில் பயணிகளின்கோரிக்கை அடிப்படையில், இந்தத் தடத்தில் நாளை (அக்.23) முதல் காலை 6 மணிக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ளது.

திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை நெரிசல் மிகுந்த நேரங்களில் 10 நிமி டங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.

மற்ற நேரத்திலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களிலும் 15நிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்படும். வடபழனி, பூந்தமல்லியில் இருந்து கடைசி ரெயில் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT