சென்னை,
பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ள தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (நவ. 24ம் தேதி) முதல் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ நிலையத்தை இணைக்கும் மஞ்சள் வழித்தடத்தில் காலை நேர மெட்ரோ சேவை தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் வழித்தடத்தில் மீதமுள்ள 7 ரெயில் நிலையங்களின் பணிகளை விரைந்து முடிப்பதற்காக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மஞ்சள் வழித்தடத்தில் காலை நேர மெட்ரோ ரெயில் சேவை 6 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கு தொடங்கும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.