தமிழக செய்திகள்

மெட்ரோ பணிகள்: சென்னையில் பின்வரும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

நாளை முதல் ஓராண்டுகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் 2-ம் கட்டப் பணிகளுக்காக (வழித்தடம்-5), திருமங்கலம் சர்வீஸ் சாலையில் மேம்பால பாதை கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. எனவே, இப்பகுதியில் நாளை (திங்கட்கிழமை) முதல் 12.07.2027 வரை ஓராண்டு காலத்துக்கு போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படுவதாக போக்குவரத்து போலீசார் அறிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

* 100 அடி சாலையின் இடதுபக்க சர்வீஸ் சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

* பாடி மேம்பாலத்தில் இருந்து அம்பத்தூர் நோக்கிச் செல்லும் வாகனங் கள், 18-வது பிரதான சாலை அல்லது 6-வது அவென்யூ வழியாகச் சென்று, இடதுபுறம் திரும்பி 13-வது பிரதான சாலையில் இணைந்து, பின்னர் வலதுபுறம் திரும்பி 2-வது அவென்யூவுக்குச் செல்ல வேண்டும். அங்கி ருந்து மீண்டும் வலதுபுறம் திரும்பி 100 அடி சர்வீஸ் சாலையை அடைந்து, பின் இடதுபுறம் திரும்பி அம்பத்தூர் எஸ்டேட் சாலையை சென்றடையலாம்.

* பாடி மேம்பாலத்தில் இருந்து கோயம்பேடு நோக்கிச் செல்லும் வாகனங் கள். வழக்கம்போல் திருமங்கலம் மேம்பாலத்தைப் பயன்படுத்திச் செல்லலாம்.

போக்குவரத்து சீராக நடைபெறுவதற்கும், இப்பணிகள் தொய்வின்றி முடிவதற்கும், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதி குடியிருப்பாளர்கள் இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.