தமிழக செய்திகள்

மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் இன்று முதல் இயக்கம்

கனமழை காரணமாக ஊட்டி மலை ரெயில் சேவை இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டன.

ஊட்டி,

கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் ஆங்காங்கே சிறு, சிறு மண் சரிவு மற்றும் ரெயில் பாதை ஓரத்தில் அருவிகள் தோன்றின. தண்டவாளத்தை மறைத்தபடி தண்ணீர் ஓடியது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கடந்த 16 மற்றும் 17-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது.தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை அளவு குறைந்தது. மேலும் தண்டவாளத்திலும் தண்ணீர் வடிந்தது.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம்- ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

SCROLL FOR NEXT