மேட்டூர் அணை திறப்பு 
தமிழக செய்திகள்

மேட்டூர் அணை திறப்பு: முதல்-அமைச்சர் விஜய் நாளை சேலம் வருகை

மேட்டூர் அணையில் நீர்வளத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மேட்டூர் அணை குறித்த விளக்கப் புகைப்படக் கண்காட்சியை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிடுகிறார்.

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்காக நாளை (செவ்வாய்க்கிழமை) முதல்-அமைச்சர் விஜய் சேலம் வருகிறார். இதையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது.

முதல்-அமைச்சர் விஜய்

இதனால் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வில்லை. இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு பரவலாக தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இந்தநிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக முதல்-அமைச்சர் விஜய் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வருகிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக மேட்டூர் செல்கிறார். பின்னர் அவர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

முதல்-அமைச்சர் விஜய் சேலம் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாது காப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் வரும் வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதாவது முதல்-அமைச்சர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் அதிகளவு வருவார்கள் என்பதால் அவர் செல்லும் வழியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அணையின் வலது கரையில் விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தண்ணீர் திறக்க உள்ள நிலையில் அணை முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேட்டூர் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திறந்து வைக்கும் நேரம் அறிவிப்பு

இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நாளை(செப். 1) மதியம் 12 மணிக்கு மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் நீர்வளத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மேட்டூர் அணை குறித்த விளக்கப் புகைப்படக் கண்காட்சியை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிடுகிறார்.

தொடர்ந்து, மேட்டூர் அணை மின் நிலையத்தைப் பார்வையிடும் முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து சேலம். காமலாபுரம் விமான நிலையம் புறப்படுகிறார். அங்கிருந்து, விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்.

SCROLL FOR NEXT