தமிழக செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,041 கனஅடியாக அதிகரிப்பு!

அணையின் தற்போதைய நீர் இருப்பு 22.62 டி.எம்.சி.யாக உள்ளது.

சேலம்,

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 5,586 கனஅடியில் இருந்து 7,041 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து நீர்மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. முன்னதாக விநாடிக்கு 5,586 கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 7,041 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 56.93 அடியில் இருந்து 57.17 அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் தற்போதைய நீர் இருப்பு 22.62 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT