நாகை,
நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் ரம்மியமான சூழல் நிலவுகிறது.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான சீசனில், ரஷ்யா, ஈரான், சைபீரியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பறவைகள் கோடியக்கரை சரணாலயத்திற்கு வந்து செல்வது வழக்கம்.
அந்த வகையில், நடப்பு சீசனையொட்டி தற்போது சரணாலயத்திற்கு செங்கால் நாரை, கூழைக்கடா, பூநாரை, கடல் காகம், தாரா வாத்து மற்றும் உள்ளான் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன.
கூட்டம் கூட்டமாக பறந்து திரியும் இந்த அரிய வகைப் பறவைகளை, சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.