தமிழ்நாடு முதல்-அமைச்சர் 
தமிழக செய்திகள்

பாலின் கொள்முதல் விலை உயர்வு: தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் நன்றி

ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை வரம்பையும் உயர்த்திடும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பொன்னுசாமி தெரிவித்தார்.

சென்னை,

பால் கொள்முதல் விலை உயர்வுக்கு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி. பாலுற்பத்தியாளர்களின் கஷ்டங்களை போல பால் முகவர்களின் கஷ்டங்களையும் கவனத்தில் கொண்டு, 110-வது விதியின் கீழான அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது குறித்து பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ஆவின் நிறுவனம்

கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறினால் அழிவின் விளிம்பில் ஆவின் நிறுவனம் இருந்து வருவதோடு, தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்காண்டு காலமாக ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதையும், தற்போது அது அதிகரித்துள்ளதையும் அனைவரும் நன்கறிவோம்.

கமிஷன் தொகை

ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டுமானால் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதோடு, விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் அத்துடன் பால் முகவர்களுக்கு ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை வரம்பை உயர்த்தி வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் . ச.ஜோசப் விஜய்க்கும், பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமிக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வந்தது.

விலையில்லா கறவை மாடுகள்

ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிக்க விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்து அதனை ஆண்டுக்கு' கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறினால் அழிவின் விளிம்பில் ஆவின் நிறுவனம் இருந்து வருவதோடு, தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்காண்டு காலமாக ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதையும், தற்போது அது அதிகரித்துள்ளதையும் அனைவரும் நன்கறிவோம்.

தவெக அரசு

ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிக்க முடிவெடுத்த தவெக அரசு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்து அதனை ஆண்டுக்கு 10ஆயிரம் பெண்களுக்கு வழங்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் மரிய வில்சன் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் கடந்த வாரம் அறிவித்தார்.

நன்றி

இந்த நிலையில் ஆவினுக்கான பால் கொள்முதல் அதிகரிக்க பால் கொள்முதல் விலையையும் உயர்த்தப்பட வேண்டும், அது ஏற்கனவே இழப்பில் இருக்கும் ஆவின் நிறுவனத்தையும் பாதிக்கக்கூடாது என்பதை சிந்தித்தும், தவெக அரசுக்கு உள்ள கடும் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டும் பால் உற்பத்தியாளர்களுக்கு மாநில அரசிடமிருந்து லிட்டருக்கு 2.00ரூபாயும், ஆவின் தரப்பிலிருந்து லிட்டருக்கு 1.00ரூபாயும் ஆக மொத்தம் லிட்டருக்கு 3.00ரூபாய் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கும், பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி க்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பால் முகவர்கள்

மேலும் அத்தியாவசிய உணவு பொருளாக விளங்கும் பால் பொதுமக்களுக்கு ஆண்டு முழுவதும் தங்குதடையின்றி கிடைத்திட வேண்டுமானால் பாலினை உற்பத்தி செய்யக்கூடிய விவசாய பெருமக்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்களோ அது போல வெயில், புயல், கனமழை, பெருவெள்ளம், மூடுபனி போன்ற எந்த இயற்கை பேரிடர் காலங்களானாலும், கொரோனா போன்ற பல்வேறு நோய் பெருந்தொற்று காலங்களானாலும் தங்களை வருத்தி கொண்டும், தங்கள் உடல் நலன் மீதான அக்கறையை தள்ளி வைத்தும் ஆண்டின் 365நாட்களும் பாலினை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்யக்கூடிய பால் முகவர்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் ஆவர்.

கமிஷன் தொகை

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பால் உற்பத்தியாளர்களும், பால் முகவர்களும் மனிதனுக்கு இரண்டு கண்கள் மற்றும் நாணயத்தின் இருபக்கங்களை போன்றவர்கள் என்பதால் அதில் ஒரு கண்ணில் மட்டும் வெண்ணையை தடவி விட்டு, மற்றொரு கண்ணை புறக்கணிப்பதும், நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் எடுத்து கொண்டு மற்றொரு பக்கத்தை தவிர்ப்பதும் ஏற்புடையதல்ல என்பதை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு சுட்டி காட்டி பால் கொள்முதல் விலையை உயர்த்தியது போல ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை வரம்பையும் உயர்த்திடும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

நடவடிக்கை

எனவே தற்போது 110விதியின் கீழ் வெளியிடப்பட்டுள்ள பால் கொள்முதல் விலை ஊக்கத்தொகை இன்றி லிட்டருக்கு 1.00ரூபாய் என்பதை மறுபரிசீலனை செய்து லிட்டருக்கு 10.00ரூபாய் வரையிலும், பால் முகவர்களுக்கு ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை வரம்பை லிட்டருக்கு 2.00ரூபாய் என்பதை 5.00ரூபாய் வரையிலும் உயர்த்தி வழங்க ஆவண செய்திட வேண்டும் எனவும், அதற்கான அறிவிப்பை அடுத்து வரவிருக்கும் பால் மானிய கோரிக்கையில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ச.ஜோசப் விஜய்யையும், பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமியையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.